Dec 1, 2022
, , ,
Movie : Naalai Namathe
Song : Neela Nayanangalil
Singer : P.Susheela , K.J.Yesudas
Music : M. S. Vishwanathan

பெண் : நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு... வந்தது

பெண் : நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோல வடிவங்களில்
பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட

பெண் : நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்தது

ஆண் : கனவு ஏன் வந்தது
காதல்தான் வந்தது
கனவு ஏன் வந்தது
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது
பள்ளிக் கொள்ளாதது

ஆண் : நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்ததோ
அதன் கோல வடிவங்களில்
பல கோடி நினைவு வந்ததோ

ஆண் : நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்ததோ

ஆண் : பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
பக்கம் நின்றாடுமோ
பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
வெட்கம் உண்டாகுமோ

பெண் : அந்த நாளென்பது
கனவில் நான் கண்டது
அந்த நாளென்பது
கனவில் நான் கண்டது
காணும் மோகங்களில்
காட்சி நீ தந்தது

பெண் : நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்தது

பெண் : மாயக் கண்கொண்டு
நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மாயக் கண்கொண்டு
நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ

ஆண் : பாதி இச்சைகளை
பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

பெண் : நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்தது

ஆண் : அதன் கோல வடிவங்களில்
பல கோடி நினைவு வந்ததோ….
view more