சர்வதேச யோகா தினம் 2022 : இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த தினம் தொடங்கப்பட்டது. ஜூன் 21ம்...தேதி அன்று யோகா தினம் நடத்த ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது.


21 -06 - 2022, இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் ஏராளமான பொது மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

யோகா தினத்தின் போது பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடர் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா தொடர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், யோகாசன நிபுணர்கள், ஆர்வலர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் மேலும் உயர்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான கருப்பொருள் (Theme) அதாவது தீம் என்னவென்றால், மனிதகுலத்திற்கான யோகா என்பதை மையமாக கொண்டு கொண்டாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று (கோவிட்-19) தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது, துன்பங்களைத் தணிப்பதில் யோகா எவ்வாறு மனிதகுலத்திற்கு சேவை செய்தது என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த கருப்பொருளை கொண்டுள்ளது.


______________________________________________________________________________________________

International Yoga Day 2022 : “Yoga for Humanity” is the theme for International Day Of Yoga 2022. The day, observed on June 21, focuses on the importance of yoga in our lives.

Yoga is an ancient Indian practice that helps to boost one’s mental and social well-being. The word ‘yoga’ is derived from the Sanskrit root ‘Yuj’ which symbolises the union of body and consciousness. Yoga is more than just asanas. It is a means of unlocking our infinite possibilities and power. The high benefits of Yoga have made it a popular practice all over the world.


During the COVID-19 pandemic, when several restrictions on the movement of people were imposed, in these tough times, many found physical and mental relaxation through yoga. In fact, yoga is instrumental in developing strength and resilience. Yoga helps in building up psycho-physiological health and managing daily stress.

Every year, people across the globe celebrate International Yoga Day with great fervour on June 21. As International Yoga Day approaches, let us take a look at its history, significance, and theme.



#YogaForHumanity #yogaday2022 #PMModi #InternationalYogaDay #YogaDay #YogaForLife #InternationalDayofYoga #PMOIndia #internationalyogaday #yogaforlife #yogamusic #yogapractice #yogalife #yoga #yogaforbeginners #yogalove #யோகா #யோகாதினம் #2022




Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.

Website: http://www.doordarshan.gov.in/ddpodhigai

Facebook: https://www.facebook.com/DDPodhigaiOfficial/

Twitter: http://twitter.com/ddpodhigaitv

Instagram: https://www.instagram.com/ddpodhigai/

Email: [email protected]
view more