Oct 10, 2024
, , ,
Movie - Chinna Durai
Singers : S. P. Balasubrahmanyam and Devi
Music by : Ilayaraja
Lyrics : Vaasan

பெண் : பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான்... இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே
கையில் உள்ள வைரம் தன்ன
கண்டு கொள்ள நான் மறந்தேன்
சின்னஞ்சிறு கிளியே
பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு
சொல்லாம ஆறாது

பெண் : பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே

ஆண் : பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே
உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத்தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே
பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு
சொல்லாம ஆறாது

ஆண் : பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே

பெண் : கண்ணு தெறந்திருந்தது
மனசு மட்டும் ஏனோ அடச்சிருந்தது
அழுவதா சிரிப்பதா அம்மாடி

ஆண் : நானா விரும்பவில்லையே
நடந்ததையும் ஏனோ தடுக்கவில்லையே
நடப்பதே நடக்குமே அம்மாடி

பெண் : பூந்தென்றலே…
தேவை இல்லா வேலிகள் உண்டாக
யார் காரணம்
பூ முல்லையே…
மிச்சத்தைக் காலங்கள்தான் கூறணும்

ஆண் : நான் நடக்கும் பாதையில் யார் நடப்பா
ஊர் பாரம் என் மீது
என் வீட்டு பாரத்தை யார் சுமப்பா

ஆண் : பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே

ஆண் : முன்னால் விழுந்த முடிச்சு
அவிழ்த்த கிளி எங்கோ பறந்து சென்றது
கெடச்சது நீயடி பூங்கிளியே

பெண் : தன்னால் விழுந்த முடிச்சு
என்னை எடுத்து இங்கே எணச்சு வெச்சது
இருப்பதே நீயடி பூங்கிளியே

ஆண் : வாழ்க்கை தரும்…
வாழ்க்கை தரும் பாடங்கள்
வேறெங்கும் கிடைக்காதம்மா
விட்டு விட்டால்
போகின்ற நேரங்கள் திரும்பாதம்மா

பெண் : கண்டெடுத்த முத்தான முத்து மணி
நான் இன்று வேறல்ல
என் வார்த்தை பொய் அல்ல நீ அறிவாய்

பெண் : பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே

ஆண் : உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத் தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே

பெண் : பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு
சொல்லாம ஆறாது

ஆண் : சொல்ல வந்த சேதிகள
சொல்ல வந்த நேரம் இது
சின்னஞ்சிறு கிளியே
உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத் தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more