#tmssongs, #tamiloldsongs,#Tamilsong
Movie : Enga Veettu Mahalakshmi
Song : Uzhudhundu Vaazhvaare...Naattukku Poruttham
Singer : T. M. Soundararajan & group
Lyric : Udumalai Narayana Kavi
Music : Master Venu

இசை... அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர் என்றே சொல்லும் பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி வழி சென்று மாண்பால் உயர்ந்த நாடு நமது தாய்நாடு

நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் பட்ட பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு பழைய கொள்கைகளை விடுவது ஞாயம்

நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்

காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள் கழனிகள் செய்வது திறமை அதனாலே கட்டாயம் நீங்கும் வறுமை காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள் கழனிகள் செய்வது திறமை அதனாலே கட்டாயம் நீங்கும் வறுமை அவ்வைப் பாட்டியும் பாட்டால் பாடிப் பெருமை பாராட்டிய தொழில் முறைமை இது பரம்பரையாய் நமக்குரிமை தமிழ்

நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்

ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில் உழுது பாடுபட முடியாது ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில் உழுது பாடுபட முடியாது ஒரு பத்துக் குடித்தனம் நூறு காணியில் பாங்காய் உழுவது தான் தோது

நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்

பாளையக்காரர் ராஜாதி ராஜா பதவிகள் பறக்கின்ற போது நம்ம பட்டாக்கள் மிட்டா மிராசுகள் ஜம்பம் கட்டாயமாய்ப் பலிக்காது நாளுக்கு நாளாக் காலம் மாறுது நடப்பதை நெனச்சா நடுக்கமாகுது நாளுக்கு நாளாக் காலம் மாறுது நடப்பதை நெனச்சா நடுக்கமாகுது ஆளை ஏய்க்க இனி முடியாது மக்கள் ஆட்சியில் சுயநலம் கூடாது நம்ம

நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்

புருஷன் பெண்டாட்டி புள்ளே குட்டிங்க உருப்படிக் கணக்கையும் போட்டுக்கணும் சரிசமமாக விகிதாச்சாரப்படி சாப்பாட்டு செலவுக்கும் வாங்கிக்கணும்

வரும்படி தன்னை அதிகமாக்கிக்கணும் வகை தொகையான செலவுஞ் செய்யணும் வரும்படி தன்னை அதிகமாக்கிக்கணும் வகை தொகையான செலவுஞ் செய்யணும் உலகம் நம்மைக் கண்டு நடக்கவே உண்மையோடு நாம் உழைக்கணும் உயிர் பிழைக்கணும்

நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
view more