#mgrsong, #tmssongs, #tamilmoviesongs, #Nenjammundunermaiunndu
Movie : En Annan
Song : Nenjamundu Nermaiunndu
Singer : T. M. Soundararajan
Lyric : Kannadasan
Music : K. V. Mahadevan

ஹோய் நெஞ்சம்
உண்டு... நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா (2)

அஞ்சி அஞ்சி
வாழ்ந்தது போதும்
ராஜா (2)

நீ ஆற்று
வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா

ஹே நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா

அடிமையின்
உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு (2)

கொடுமையை
கண்டு கண்டு பயம்
எதற்கு (2)
நீ கொண்டு வந்ததென்னடா
மீசை முறுக்கு ஹோய்

நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து
பார்கின்ற மாளிகை
கட்டி அதன் அருகினில்
ஓலை குடிசை கட்டி (2)

பொன்னான
உலகென்று பெயருமிட்டால் (2)
இந்த பூமி சிரிக்கும் அந்த
சாமி சிரிக்கும் ஹோய்

நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா

உண்டு உண்டு
என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால்
பூமியேது கவலை விடு (2)

ரெண்டில் ஒன்று
பார்பதற்கு தோளை
நிமிர்த்து (2)
அதில் நீதி உன்னை தேடி
வரும் மாலை தொடுத்து

ஹோய் நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி
வாழ்ந்தது போதும்
ராஜா

நீ ஆற்று
வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா

ஹோய் நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா
view more