Jun 28, 2022
, ,
Guest : Dr.S. Srinivasan
Nodal Officer
Institute of Child Health, Egmore



ஊட்டச்சத்து பெறுவதற்கான 5 வழிமுறைகள்:-

...முழுமையான ஊட்டச்சத்து பெறுவதற்கான பிரதமரின் ஊட்டச்சத்து இயக்கம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கர்ப்ப காலம் முதல், குழந்தை பிறந்து, வளர் இளம் பருவத்தை அடையும் வரையிலும், ஊட்டச்சத்து பெறுவதற்அகான 5 முக்கிய வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

1. முதல் 1000 நாள் பொற்காலம்.
கர்ப்ப காலம் முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டாண்டு காலம் வரையிலான முதல் ஆயிரம் நாட்கள், குழந்தையின் உடல் மற்றும் மனவளர்ச்சி மிக வேகமாக நடைபெறும் பருவமாகும். இந்தக் காலக்கட்டத்தில், நல்ல ஆரோக்கியம், போதுமான ஊட்டச்சத்து போன்றவற்றுடன் அன்பு, அரவணைப்பு, மன அழுத்தமற்ற சுற்றுச்சூழல் மற்றும் பொறுப்பான கவனிப்பு போன்றவை ஒரு குழந்தை அதன் முழு வளர்ச்சியை அடைய உதவும்.
இந்தக் காலக்கட்டத்தில் தாய்க்கும், சேய்க்கும் (குழந்தைக்கும்) சரியான ஊட்டச்சத்து, கவனிப்பு மற்றும் ஆதரவு தேவை.

2. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்

6 மாத குழந்தை முதல் அனைத்து வயதினரும், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது அவசியம்.
ரொட்டி / அரிசி மற்றும் மஞ்சள் மற்றும் கருப்பு நிற பருப்புகள், புதினா, வெந்தயம், கடுகு, பீட்ரூட், கேரட் போன்ற கீரை வகை காய்கறிகள், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற மஞ்சள் / ஆரஞ்சு நிற பழங்கள் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அசைவம் சாப்பிடுவோர் எனில், முட்டை, இறைச்சி மற்றும் மீன் வகைகள்.
பால், பால் பொருட்கள் மற்றும் கொட்டை வகை பருப்புகள் உணவில் இடம்பெறவேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சாப்பிடக்கூடிய பொருட்கள் குழந்தை பிறந்து ஆறு மாதம் கழிந்தவுடன், தாய்ப்பாலுடன், பூசணிக்காய், கேரட், பருப்பு உள்ளிட்ட மசித்த ஓரளவு திட உணவுகளையும், அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் முட்டை, மீன் மற்றும் இறைச்சி உட்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான உணவுடன், ஒரு தேக்கரண்டி அளவு நெய் / எண்ணெய் / வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான உணவில் குறைந்த அளவிலான உப்பு, சர்க்கரை மற்றும் வாசனைப்பொருட்கள் கலந்து கொடுக்கலாம். ஒரு வேளைக்கு ஒரு உணவு வீதம் படிப்படியாக பல்வேறு உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். பல்வேறு சுவைமிக்க மற்றும் வண்ணமயமான உணவுகளை கொடுத்தால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.
பிஸ்கெட், சிப்ஸ், நொறுக்குத்தீனிகள் மற்றும் பழரசங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது ஏனில் இவற்றில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லை.


#ஊட்டச்சத்து #nutrition #babyfood


Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.

Website: http://www.doordarshan.gov.in/ddpodhigai

Facebook: https://www.facebook.com/DDPodhigaiOfficial/

Twitter: http://twitter.com/ddpodhigaitv

Instagram: https://www.instagram.com/ddpodhigai/

Email: [email protected]
view more