சித்திரச் சோலைகளே | Chittirai Solaigale | M. G. R | K.R. Vijaya | Ps Tamil Song #oldhitsong

Movie - Naan Yen Pirandhen
Music - Shankar–Ganesh
Lyrics - Bharathidasan
Singer - T. M.... Soundararajan
ஆண் : சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே…ஏ …ஏ…

ஆண் : சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே…
உங்கள் வேரினிலே…

ஆண் : தாமரை பூத்த தடாகங்களே
உமை தந்த அக்காலத்திலே
தாமரை பூத்த தடாகங்களே
உமை தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே
சொல்லவோ ஞாலத்திலே

ஆண் : சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே…
உங்கள் வேரினிலே…

ஆண் : ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ
உதித்தது மெய் அல்லவோ…

ஆண் : தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீயன்றோ
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீயன்றோ
பசி தீரும் என்றால்
உயிர் போகும் எனச் சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ
செல்வர்கள் நீதி நன்றோ

ஆண் : சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே…
உங்கள் வேரினிலே…

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more