May 25, 2024
, , ,
Movie - Natpu
Music by - Ilayaraja
Singer's - Jayachandran and P. Susheela

பெண் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம்... எடுத்தேன்
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க…..

ஆண் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண் : அக்கம் பக்கம் நானும் பார்த்து
முத்தம் தந்தேன் முந்நூறு
பெண் : எண்ணிக் கொள்ள நேரம் இல்லை
இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண் : மோகத்திலே கண்ணன் இவன்
முத்தத்திலே வள்ளல் இவன்
பெண் : அன்பே அள்ளிக் கொள்ள வா
அங்கம் எங்கும் புதையல்

ஆண் : கொள்ளை கொள்ளும் நேரம்
சத்தம் போடும் வளையல்
பெண் : பிரியாதே எனை என்று
வளையல்கள் வாதாடுதோ….

ஆண் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

பெண் : நம்மைக் கண்டு நாணம் கொண்டு
விண் மீன்களும் கண் மூடும்
ஆண் : வெட்கம் எனும் பாரம் கொண்டு
பெண்மை இன்று திண்டாடும்

பெண் : ரோஜா மொட்டு பூவானது
இப்போதுதான் ஆளானது
ஆண் : தேகம் எங்கும் ஈரம்
தேனே கொஞ்சம் திரும்பு

பெண் : கோழி கூவும் நேரம்
போதும் போதும் குறும்பு
ஆண் : இந்த வேளை இன்ப லீலை
இடைவேளை கூடாதடி

பெண் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்…..
ஆண் : தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க…..

பெண் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்…..

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more