Aug 2, 2024
, , ,
Movie : Velli Ratham
Singers : L. R. Eswari and Seerkazhi Govindarajan
Music : M. S. Vishwanathan
Lyrics : A. L. Narayanan

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும்... சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும்
நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும்
அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும்
நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும்
தட்டாமல் அவள் சன்னிதானம் திறக்கும்
எட்டு பேர் கொண்டாளின் துணை இருக்கும்
தட்டாமல் அவள் சன்னிதானம் திறக்கும்
எட்டு பேர் கொண்டாளின் துணை இருக்கும்

குழு : திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான்
திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்

ஆண் : அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும்
நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும்

ஆண் : தாங்காத ஏழ்மைக்கு துணை வருவாள்
தனலக்ஷ்மியாய் வந்து பொருள் தருவாள்
தாங்காத ஏழ்மைக்கு துணை வருவாள்
தனலக்ஷ்மியாய் வந்து பொருள் தருவாள்
நீதிக்கு நாயகியாய் தான் இருப்பாள்
ஆதிலக்ஷ்மியாய் வந்து தீர்ப்பளிப்பாள்

குழு : திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான்
திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்…

ஆண் : அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும்
நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும்

ஆண் : மழைக் காணா பூமிக்கு தாயாக
தான்யலக்ஷ்மி என சொல்லி மழை பொழிவாள்
சந்தானம் சௌபாக்கியம் பெருகி சேர
சந்தான லக்ஷ்மியாக வரம் அளிப்பாள்

குழு : திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான்
திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்…..

ஆண் : அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும்
நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும்

ஆண் : போகுமிடம் எல்லாமே வெற்றி சேர
விஜயலக்ஷ்மி அன்னைதான் திலகமிடுவாள்
ஆன கல்வி அத்தனையும் அறிந்து தேற
வித்யாலக்ஷ்மி தேவியாக அருள் தருவாள்

குழு : திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான்
திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்…..

ஆண் : கோழைக்கு வழிக் காட்டும் வீரமாக
தைர்யலக்ஷ்மியாக வந்து ஆண்மை அளிப்பாள்
ஆரோக்கியம் ஆயுளுக்கும் வழி காட்ட
கஜலக்ஷ்மி எனும் பேரில் மேன்மை கொடுப்பாள்

குழு : திரிசூலி என்றாலும் அவள் நாமம்தான்
திருமாலின் ஸ்ரீதேவி அவதாரம்தான்

ஆண் : அவளிடம் கேளுங்கள் வழி கிடைக்கும்
நம் அத்தனை துயருக்கும் வழி பிறக்கும்
தட்டாமல் அவள் சன்னிதானம் திறக்கும்
எட்டு பேர் கொண்டாளின் துணை இருக்கும்

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more