Music - T. Rajendar
Lyrics - T. Rajendar
Singer's - S. Janaki
பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும்... பெறும்
சுகம் சுகம் மழை தரும் தரும்
ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும்
மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ
தலைவனின் அணைப்பினில்
தளிர் உடல் சிலிர்ப்பினில்..ஹஹாஹ்…ஹாஹ்…
பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
குழு : ……………………
பெண் : தாழம்பூ நிற மேனியில்
தங்கத்தின் ஒளி சிந்துதோ
தாழம்பூ நிற மேனியில்
தங்கத்தின் ஒளி சிந்துதோ
வைர இழையினிலே பிரம்மன் நெய்து வைத்த
பட்டென்று எனை எண்ணினான்
பெண் : வார்த்தை தேனெடுத்து கம்பன் இசைத்து வைத்த
பாட்டென்று எனைப் பாடினான்
நெருடினான் வருடினான் என்னை திருட்டிட்டான்
பதறினேன் உதறினேன் ஆனால் உருகினேன்
பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ
தலைவனின் அணைப்பினில்
தளிர் உடல் சிலிர்ப்பினில்..ஹஹாஹ்…ஹாஹ்…
பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
குழு : …………………….
பெண் : விரல்களின் விளையாடலை
நடத்தினான் என் நாயகன்
விரல்களின் விளையாடலை
நடத்தினான் என் நாயகன்
வெள்ளைத் தாள்களிலே எழுதுகோல் எடுத்து
தழுவிட கவி பிறக்குது
பெண் : பாதத் தாள்களிலே இதழின் மை நனைத்து
எழுதிட மதி மயங்குது
அழைக்கிறான் அணைக்கிறான் தொல்லை கொடுக்கிறான்
தவிக்கிறேன் துடிக்கிறேன் முல்லை சிரிக்கிறேன்
பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்
ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும்
மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ
தலைவனின் அணைப்பினில்
தளிர் உடல் சிலிர்ப்பினில்….ஹஹாஹ்…ஹாஹ்…
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more