Jan 5, 2025
, , , , , ,
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் || Mamarathula Oonjal || Melody Song || HD Video || #love #melody #hit

Song - Mamarathula Oonjal
Music - Ilaiyaraja
Lyrics - Kasthuri Raja
Singer's - P. Unnikrishnan... and Bhavadhaarini

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

ஆண் : ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
பெண் : அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்

ஆண் : அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : கத்தாழை பழம் தின்னும் ஆசை கொண்டேன்
ஆண் : கை எல்லாம் முள்ளாகும் தாங்கி கொள்வேன்
பெண் : அழகான பொன்வண்டு எனக்கும் வேணும்
ஆண் : வண்டோடு நான் பறந்து கொண்டு வருவேன்

பெண் : முத்தின மாம்பழம்
எத்தனை தொங்குது எச்சில் ஊறுதே
ஆண் : மொய்த்திடும் எறும்புகள்
கடித்திடும் அப்பவும் அச்சம் இல்லையே

பெண் : வேலி மேல் ஒரு வாசனை பூ
வேண்டும் என்று தோன்றுதே
ஆண் : வாசனை பூ நீ ரசிக்க
நான் பறித்து சூடிட
நீ சிரிக்கையில் பூ சிரிக்குதடி
என் உள்ளம் துள்ளுது

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : வெயிலான மணல் மேலே காலும் சுடுதே
ஆண் : செடி எல்லாம் மெத்தை போல் போட்டு தருவேன்
பெண் : மழை என்றால் எப்போதும் எனக்கு பயமே
ஆண் : குடை போல என் சட்டை கழற்றி பிடிப்பேன்

பெண் : கணக்கில மார்க் இல்ல
வாத்தியார் அடிச்சிட கை ஓங்கிட
ஆண் : உனக்கடி விழும் முன்பு
எனக்கது வலித்திடும் நான் வாங்குவேன்

பெண் : ராத்திரிக்கு நான் முழிச்சேன்
நீ முழிக்கிற தாங்கல
ஆண் : நான் உறங்கிட பாட்டு சொல்லுற
நான் முழிக்கிறேன் தூங்கல
தூக்கம் இங்கு காத்திருக்குதடி
பெண் : விடியும் நேரத்துல….

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

ஆண் : ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
பெண் : அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்

ஆண் : அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே


Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more