Aug 19, 2022
, , ,
சின்ன மணி (chinnamani )1995 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். எம். திலகராஜன் இத்திரைப்படத்தை... இயக்கியிருந்தார். நெப்போலியன், கஸ்தூரி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் அவர்களுடன் இணைந்து ஆர். பி. விஸ்வம், ஸ்ரீவித்யா, அனுராதா, எஸ். எஸ். சந்திரன், வடிவேலு, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை கே. எஸ். ஸ்ரீனிவாசன், கே. எஸ். சிவவர்மன் ஆகியோர் தயாரித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் மார்ச் 03, 1995 வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்
துரைசாமி தேவர் (நெப்போலியன்) நல்ல குணமுடைய மனிதர். ஆனால் அவரின் தந்தை புலிகேசி தேவர் (ஆர். பி. விஸ்வம்) துரைசாமி தேவருக்கு துரோகம் இழைத்துள்ளார். துரைசாமி தேவரும் தனது தந்தையை வெறுத்தார். ஏனெனில் புலிகேசி தேவர் துரைசாமி தேவரின் தாயும் தனது முதல் மனைவியுமான ஸ்ரீவித்யாவிற்கு துரோகம் இழைத்து விட்டு ஒரு பெண்ணை (அனுராதா) இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். சின்ன மணி (கஸ்தூரி) ஏழைப்பெண். அவள் இளவயதிலே கணவனை இழந்த காரணத்தினால் ஊர்மக்கள் அவளை வெறுத்தனர். மேலும் அவளின் துரதிஷ்டத்தினால்தான் கணவன் இறந்தான் என்றும் கூறத்தொடங்கினார்கள். துரைசாமி தேவரின் மனைவி நோய்வாய்பட தனது மகனை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திறாள். அதனால் துரைசாமி தேவர் சின்ன மணியை திருமணம் செய்கிறார். பின்னர் தான் எதற்கு திருமணம் செய்யவில்லை என்பதை கூறுகிறார். தான் முன்னர் பிறின்சி (அனுஷா) எனும் பெண்ணை காதலித்ததாகவும். துரைசாமி தேவரை தான் திருமணம் செய்ய முடியாது என்ற விரக்தியில் அப்பெண் தற்கொலை செய்து விடுகிறாள் என கூறினார்.

நடிகர்கள்
நெப்போலியன் - துரைசாமி தேவர்
கஸ்தூரி - சின்ன மணி
ஆர். பி. விஸ்வம் - புலிகேசி தேவர்
ஸ்ரீவித்யா - புலிகேசி தேவரின் முதலாம் மனைவி
அநுராதா - புலிகேசி தேவரின் இரண்டாம் மனைவி
எஸ். எஸ். சந்திரன்
வடிவேலு - பேச்சிமுத்து
அனுஷா - பிறின்ஸி
ராகவி - பார்வதி

இயக்கம் எம். திலகராஜன்
தயாரிப்பு கே. எஸ். ஸ்ரீனிவாசன்
கே. எஸ். சிவராமன்
கதை எம். திலகராஜன்
இசை தேவா
நடிப்பு
நெப்போலியன்
கஸ்தூரி
ஆர். பி. விஸ்வம்
ஸ்ரீவித்யா
அநுராதா
எஸ். எஸ். சந்திரன்
வடிவேலு
அனுஷா
ஒளிப்பதிவு சிவா
படத்தொகுப்பு ஏ. ஆர். பாண்டியன்
தயாரிப்பு சிவஸ்ரீ பிக்சர்ஸ்
வெளியீடு மார்ச்சு 3, 1995

For More HD Videos Subscribe
view more