Aug 31, 2024
, , ,
Movie - Kadavulin Theerpu
Music - R. Govarthanam
Lyrics - Kannadasan
Singer's - T. M. Soundararajan

ஆண் : பத்து மாதந்தான் அத்தனை பேரும்
படைப்பினிலே என்ன... பேதமடா
பத்து மாதந்தான் அத்தனை பேரும்
படைப்பினிலே என்ன பேதமடா

ஆண் : பள்ளம் மேடும் சமமாவதுதான்
பகுத்தறிவு சொல்லும் வேதமடா
பள்ளம் மேடும் சமமாவதுதான்
பகுத்தறிவு சொல்லும் வேதமடா
பகுத்தறிவு சொல்லும் வேதமடா

ஆண் : ஏற்றம் இறக்கம் என்பவை எல்லாம்
எவனால் வந்ததடா
எலும்பிலும் தோலிலும் ஜாதியின் பெயரை
எழுதியதில்லையாடா

ஆண் : ஏற்றம் இறக்கம் என்பவை எல்லாம்
எவனால் வந்ததடா
எலும்பிலும் தோலிலும் ஜாதியின் பெயரை
எழுதியதில்லையாடா

ஆண் : அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் எல்லாம்
உயர்ந்த ஜாதியடா
அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் எல்லாம்
உயர்ந்த ஜாதியடா
அன்று ஔவை சொன்னது என்றும் வாழும்
சிறந்த நீதியடா……

ஆண் : பத்து மாதந்தான் அத்தனை பேரும்
படைப்பினிலே என்ன பேதமடா

ஆண் : நல்லவர் சிலபேர் பேதத்தை ஒழிக்க
நாட்டினை ஆள்கின்றார்
அவர் நன்மைகள் செய்து புரட்சிகள் நடத்தி
சரித்திரம் ஆகின்றார்

ஆண் : நல்லவர் சிலபேர் பேதத்தை ஒழிக்க
நாட்டினை ஆள்கின்றார்
அவர் நன்மைகள் செய்து புரட்சிகள் நடத்தி
சரித்திரம் ஆகின்றார்

ஆண் : சொல்லிலும் செயலிலும் மாறுபடாமல்
தூயவராகின்றார்
அந்தத் தூயவர்தானே கடவுள் அனுப்பிய
தூதுவர் ஆகின்றார்……..
தூதுவர் ஆகின்றார்……..

ஆண் : பத்து மாதந்தான் அத்தனை பேரும்
படைப்பினிலே என்ன பேதமடா

ஆண் : ஈசன் என்பவன் நீரை தொட்டால்
நீரும் குளிர்கின்றது
அந்த நீரை போலே நெருப்பை தொட்டால்
நெருப்பும் சுடுகின்றது

ஆண் : ஈசன் என்பவன் நீரை தொட்டால்
நீரும் குளிர்கின்றது
அந்த நீரை போலே நெருப்பை தொட்டால்
நெருப்பும் சுடுகின்றது

ஆண் : ஈசன் என்பவன் படைத்த படைப்பில்
எதுவும் தவறில்லை
ஈசன் என்பவன் படைத்த படைப்பில்
எதுவும் தவறில்லை
நாம் இன்றைய பேதத்தை மாற்றாவிட்டால்
எவருக்கும் வாழ்வில்லை….

ஆண் : பத்து மாதந்தான் அத்தனை பேரும்
படைப்பினிலே என்ன பேதமடா

ஆண் : பள்ளம் மேடும் சமமாவதுதான்
பகுத்தறிவு சொல்லும் வேதமடா
பகுத்தறிவு சொல்லும் வேதமடா



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more