Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
ஆண் : நான் பெத்தெடுத்திடாத
முத்து மணித் தேரே
நான்... தத்தெடுத்திடாத
தங்கமணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும்
பந்தமிருந்தும் சொல்லவில்லையே
அடி கண்ணே தூங்காதே
சிறு பெண்ணே கலங்காதே
ஆண் : ஒரு பாட்டாலே
சொல்லி அழைச்சேன்
ஒரு பலன் கேட்டு
கண்ணு முழிச்சேன்
ஆண் : அடி ஆத்தாடி
ஒன்ன நெனச்சேன்
ஒரு அன்பாலே
மெட்டு படிச்சேன்
ஆண் : உன் சோகம் பறக்க
என் பாட்டு விருந்து
அத கேட்டு மறந்தா
என் பாட்டு மருந்து
ஆண் : நீ கூட இருந்தா
அது போதும் எனக்கு
வாடி இருந்தா துன்பம் எனக்கு…
ஆண் : ஒரு பாட்டாலே
சொல்லி அழைச்சேன்
ஒரு பலன் கேட்டு
கண்ணு முழிச்சேன்
ஆண் : நான் ஆதாரம் இல்லா…
அந்தரத்து வானம்…
என் நாவோடு சேரும்….
நாட்டுப்புற கானம்….
ஆண் : என் சொந்தக் கதைய
சொல்லிப் படிக்க சந்தமில்லையே
அத சொன்னா ஆறாது
என் சொந்தம் மாறாது
ஆண் : நான் தாயாரப்
பாத்ததும் உண்டு
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல
தெனம் பாலூட்டி என்ன வளத்த
பரிவான சொந்தமும் இல்ல
ஆண் : இந்த ஊரு முழுக்க
என் பந்த ஜனங்க
உண்மை இருக்கும்
வெள்ளை மனங்க
ஒரு காவல் இருக்கு
என் கை வணங்க
நான் கானம் படிச்சேன்
கண்ண தொறக்க..
ஆண் : நான் தாயாரப்
பாத்ததும் உண்டு
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல
ஆண் : ஒரு ஈ எறும்பு கடிச்சாலும்
தாய் மனசு நோகும்
நீ பாய் விரிச்சு படுத்தாலே
இப்ப என்ன ஆகும்
ஆண் : ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி
வளத்து காத்துக் கிடந்தா
அந்த தாயோட மொகம் பாரு
கண்ணு ஒரு நாளும் ஒறங்காது
ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல
அத கேட்காத ஆட்களும் இல்ல
நான் நாவாரப் பாடி அழைச்சா
வந்து பாக்காத பார்வையும் இல்ல
ஆண் : என் தாயி கொடுத்த
ஒரு சக்தி இருக்கு
உன்ன தட்டி எழுப்ப
புத்தி இருக்கு
உன்ன தாவி அணைக்க
ஒரு நேரம் இருக்கு
அந்த நேரம் வரைக்கும்
பாரம் எனக்கு……
ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல
அத கேட்காத ஆட்களும் இல்ல
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more