வானம் இடி இடிக்க || Vaanam idi idikka ||New Year Special Song | HD Video | #happynewyear #ilayaraja

Song : Vaanam idi idikka
Singer : SPB,S.Janaki
Music : Ilayaraja
Lyrics :... Vaali

ஆண் : வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்

ஆண் : வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா
எனக்கது கெடச்சதம்மா
என்னம்மா சொல்லம்மா
கண்ணம்மா கைய்யத் தொட்டு

பெண் : வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்

குழு : ……………………………………………..

பெண் : சின்னச் சின்ன ஆச
என்னத் தொட்டுப் பேச
கன்னி மனம் கூச
அங்கு காதல் வாசம் வீச
இது காமன் போட்ட பூச

ஆண் : மொட்டு மல்லி மால
கட்டி வச்ச வேள
பட்டுக் கூரச் சேல
தொட்டு கட்டிப் பாக்கும் சோல
மேளம் கொட்டிப் பாடும் வேள

பெண் : ஆளான அழகான
கொடி தான் அய்யா
அதில் பூத்த புதுப் பூவில்
தேன்தான் அய்யா

ஆண் : தேன் அள்ளி நான் உண்ண
திரை ஏனம்மா
திரளான சுகம் காட்டும்
கரை நானம்மா

பெண் : வெக்கமா சொர்க்கமா
விட்டு விட்டுச் செல்லுமா
பக்கமா வந்துதான்
மொத்தமா பலன் தரும்..

பெண் : வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்

பெண் : நெனச்சது பலிச்சதைய்யா
எனக்கது கெடச்சதைய்யா
என்னம்மா சொல்லய்யா
கண்ணம்மா கைய்யத் தொட்டு

ஆண் : வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்

குழு : ……………………………………..

ஆண் : பொன்னுமணி பூட்டி
பூ விலங்கு சூட்டி
கன்னி வரும் நேரம்
அப்ப தன்னால் தீரும் பாரம்
அதன் பின்னால் போதை ஏறும்

பெண் : கட்டிலுக்கு மேலே
ரெட்டக் கிளி போலே
ஒட்டி நின்னு பாடும்
இளவட்டம் மோகம் தேடும்
அதில் சொர்க்கம் நேரில் கூடும்

ஆண் : வாழ்நாளில் நினைக்காத
புது நாள் இது
காணாத கலையாத
கலைதான் இது

பெண் : தேனோடு தினையாக
இணையானது
மானோடு மானாக துணையானது

ஆண் : எண்ணம்தான் துள்ளுது
என்னமோ சொல்லுது
கண்ணமா வண்ணமா
இன்பமா பொங்கி வரும்..

ஆண் : வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
பெண் : இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா
எனக்கது கெடச்சதம்மா
பெண் : என்னம்மா சொல்லய்யா
கண்ணம்மா கைய்யத் தொட்டு

பெண் : வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
ஆண் : இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more