Jun 15, 2024
, , ,
Movie - Punnagai Mannan
Music - Ilaiyaraaja
Lyrics - Vairamuthu
Singer's - Vani Jairam, P. Jayachandran

பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது... ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்

பெண் : பூமி இங்கு சுற்றும்
மட்டும் ஆட வந்தேன் என்ன
நட்டம் ஓடும் மேகம் நின்று
பார்த்து கைகள் தட்டும்

பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : நேற்று என் பாட்டு
ஸ்ருதியில் விலகியதே
பாதை சொல்லாமல்
விதியும் விலகியதே

பெண் : காலம் நேரம்
சேரவில்லை காதல்
ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை

பெண் : வாய் திறந்தேன்
வார்த்தை இல்லை கண்
திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின்
சோதனை புரியுமா இவள்
மனம் இது விடுகதை

பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள்
நடனம் பாருங்கள் ஓ

ஆண் : ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம்

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
குழு : { ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம் } (2)

ஆண் : ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம்

பெண் : ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட ஜகம்
நடுங்க என் பாதங்கள்
ஆட

பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தக்க
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தம்

பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தக்க
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தம்

பெண் : ஜகன தீம்த
ஜகன தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட
ஜகம் நடுங்க என்
பதங்கள் ஆட

பெண் : பாறை மீது
பவள மல்லிகை பத்தியம்
போட்டதாரு ஓடும் நீரில்
காதல் கடிதம் எழுதிவிட்டது
யாரு அடுப்பு கூட்டி அவிச்ச
நெல்லை விதைத்து விட்டது
யாரு அலையில் இருந்து
உலையில் விழுந்து துடி
துடிக்கிது மீனு

பெண் : இவள் கனவுகள்
நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட
விடியட்டும் இந்த இரவு

பெண் : கிழக்கு வெளிச்சம்
இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு
பலிக்கட்டும் இருண்டு
கிடக்கும் மனமும்
வெளுக்கட்டும்

பெண் : ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட ஜகம் நடுங்க
என் பாதங்கள் ஆட ஓம்
ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என்
பாதங்கள் ஆட

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more